Wednesday 15 September 2010

தம்பி சுதாகரனே!

தம்பி சுதாகரனே!

கன்னங்கரியவன்
கள்ளமில்லா சிரிப்பினன்
என்னைவிட ஈரைந்து வயதால் இளையவன்!
தன்னையென் தம்பியாய் தனக்குள் வரித்தவன்!
என்னவானான்?
எங்குதான் போனானவன்?

உதிரத்தில் ஒன்றல்லதான்!
உரிமை எடுத்தவன்!
அதரத்தால் அக்காவென்று அன்பு சொரிந்தவன்!   
பதறவெமைவிட்டு பாவி, அப்பாவி எங்கே?!
சிதறும் நினனவுகள்! சிந்திடும் ஏக்கங்களாய்!

மூன்றுவேலிகள் தள்ளியே அவன்வீடு
மூன்றுடன் பிறப்புகள்!
மூன்றாவது பிள்னளயிவன்!
சான்றேதுமில்லையே சரித்திரம் ஆனானோ!
ஆச்சே ஆண்டுகள் பத்து!
ஆண்மகன் அவன்தொலைந்து!

ஓட்டிலே காய்ச்சி ஓலையில் ஊற்றினாலும்
கூட்டிவரும் தோழர்க்கு விருந்து வைப்பாளன்னை!
நாட்டில் வந்ததே பயங்கரம்!
நாசமாச்சே அத்தனையும்!-நெஞ்சில்
பூட்டிவளர்த்த மூத்தமகன் போய்விட்டானே!
போனவிடமேதோ?

கல்விமானில்லை தான்நீ! –அதன்
கனம் தெரிந்த தமிழன்நீ!
கணிதத்தில் பிரியமானவனே
காற்றாகித்தான் போனாயோடா தம்பீ!

துன்பத்தில் துணைநின்றதுன் சொற்கள்
நீந்திவந்த கரையதனில் நீயில்லையடா சுதா!
உன்னைக் காவு கொண்டானரா?
என்னவெல்லாம் நீநினைப்பாயோ?
இன்னும் நீ இருக்கின்றாயா? ஓடிவாடா!

மேடையேற மறுத்தவுன்னை
ஏறவைத்து மகிழ்ந்தோமே!
தேடிவரும் கூட்டங்கள் சிரிக்கவைக்கும் கலைஞனாய்
நாளடைவில் ஆனாயே! தனியிடம் எடுத்தாயே!
நாட்டைவிட்டு வந்தாலும்
நெஞ்சக்கூட்டில் உள்ளதடா உன்னினைவு!

காதலிலே கனவு கண்டாய்!
காதலையுமே காவுகொடுத்தாய்!
பூதலத்திலுள்ளாயா?
போய்த்தான்விட்டாயா?
காணுகின்ற கனவில்கூட
கவலைதோய்ந்தவுன்முகமே தெரியுதடா!

சொட்டுகின்ற மழையிலே
கிட்டுகின்ற பற்களுடன் -ஊர்
விட்டுநாம் கிளாலிபோகையிலே
இருண்டுவிட்ட உந்தன்முகம்!
எப்படியும் கொழும்பு போங்கோ வதனியக்கா
என்றவன் நீகொண்டதுயர்
சட்டியில் கறுப்பாக
ஒட்டிக் கொண்டதையனே! ஓடிவாடா!

கூடிப்பிறக்காவிடினும்
கூடியளவு உதவிநின்றாய்!
கூடப்பிறந்தவள் கலங்குகிறாள்!
தேடவைத்தே நீபோனதென்ன?
உன்னைப் பிரிந்த துயரினிலே
தன்னிளமை தொலைத்ததாலே
இன்னுமுன்னக்காள் இருக்கின்றாள் குமராக!
என்னவெல்லாம் செய்தாயவளுக்கு
இன்னுந்தான் வேகின்றாள் அதைநினைத்து!
என்னாலாற முடியலைன்னா
உன்னக்காள் நிலைதான் சொல்!

உன் சீண்டலில்லை! உன் விமர்சனங்களில்லை!
உன்வீட்டில் மட்டுமல்ல இந்தநிலை - இப்போதும்
நம்நாடடில் காணாதோர் பட்டியலும் நிளுகின்றது!
என்றுதான் இந்தநிலை எங்கள் நாட்டில் மாறிடுமோ?

=================================================

நிலாமுற்றம் உங்கள் வரவால் ஒளி பெறுகிறது!

 அன்பு உறவுகளே!


உள்ளத்தில் எழும் உணர்வுகளை மற்றவர்களிடம் பகிர கிடைப்பதென்பது ஒரு பாக்கியம் என்றே கூறவேண்டும். நமது படைப்பு மற்றவர்களை மகிழ்விக்கும் போது, அல்லது மனதைத் தொடும் போது கிடைக்கும் நிறைவே தனி.

மிக முக்கியமாக எமது ஆக்கம் பற்றிய உங்கள் கருத்தை அறிவதற்கு மிக ஆவலாய் உள்ளோம். ஆக்கமான விமரசனத்தையே எதிர்பார்த்து காத்திருக்கிறாள் இந்த நிலா.

நன்றி! அடிக்கடி வாருங்கள்.



-----------------------------------------------------------------------
 'நிலாவின் இந்திய உலா'

இணையத்து உறவுகளின் ஒருங்கிணைப்பில் உருப்பெற்றது இந்த 'நிலாவின் இந்திய உலா' என்ற நூல் வெளியீட்டுவிழா!

இந்த நூலை வெளியிடப் பட்ட அனுபவங்களே வித்தியாசமானவை. சற்றுக்கடினமானவையும் கூட. அந்த அனுபவங்களை உங்களிடம் பகிர்வதே சுகம் தான். இதைப் பகிர்வது உற்சாகத்தை ஊட்டுவதற்கேயன்றி பிறிதொன்றுக்குமல்ல.

23 ஆகஸ்ட' 2010 இல் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு 24 அதிகாலை சென்னை விமான நிலையத்தை அடைந்தால் அங்கு எமக்காகக் காத்திருந்தது வெடிப்பதற்கு.

என்னை வரிகள் திணைக்கள அதிகாரி தனது அலுவலகத்திற்கு என்னை வரும்படி அழைத்தனர் ஒலிவாங்கியில். என் சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு போகும் படி வற்புறுத்தினேன்.

கிடைத்த செய்தி நாராசமாகக் காதில் விழுந்தன. எனது மருத்துவ உபகரணமான ஹொய்ஸ்ட் விமானத்தில் அனுப்பி வைக்கப்படவில்லை என்பமே அது;

'என்ன கொடுமை இது?'.........நான் துடித்தே போய் விட்டேன்.

நாம் மூவர் பயணிக்கின்றோம். ஆளுக்கு மூன்று பொதிகள், அத்துடன் எனது மருத்துவ உபகரணங்கள் மூன்று எனக் கொண்டு வந்துள்ளோம். இந்தப் பொதிகளை மாத்திரம் கொண்டு  வராததன் அவலம் என்ன....

அதுவும் என்னைப் பராமரிப்பதெற்கென பாரிய பணச்செலவில் வாங்கிய இந்த உபகரணத்தை மாத்திரம் மிகவும் பிரசித்தம் பெற்ற பிரிட்டிஷ் எயர்வேய்ஸினர் அனுப்பவில்லையென்றால்...

துன்பத்துக்கு ஒரு அளவு வேண்டாமா? என்னைப் பராமரிக்க வந்த பெண் எஎன்னைத் தனியாகத் தூக்கிப் பராமரிக்க இந்த உபகரணத்தை எப்படி இவர்கள் அனுப்பாமல் விடமுடியும?... மனம் அல்லலில்த் தவித்தது.

இதுவே லண்டனில் என்றால்?? பொவா (POVA - Poor Vulunarable

========================================================

பிடிக்கவில்லை!
இங்கிலாந்து நாட்டிலிப்போ
வெந்துதகிக்கும் வெய்யில்
பிடிக்கவில்லை!

இங்கிதமறிந்து பழகமறுக்கும்
நண்பர்கள் சுயநலநட்பு
பிடிக்கவில்லை!

அங்கொன்றும் இங்கொன்றும்
விதமாய்நடிக்கும் உறவுகள்
பிடிக்கவில்லை!

பங்கம்தரும் விதமான இரகசியங்களை
பகிரங்கமாக்குவது
பிடிக்கவில்லை!

பணம்வந்ததும் பழையதை
மறக்கும் பாமரர்செயல்
பிடிக்கவில்லை!

மணந்தரும் மலர்களின் திறமைகளை
மெச்சமறுப்பது
பிடிக்கவில்லை!

மதந்தரும் மகிமைகளை
ஊடகமாக்கும் உன்மத்தரைப்
பிடிக்கவில்லை!

சினந்தரும் வதந்தியால் சீர்பெற்றநல்வாழ்வுகள்
சின்னாபின்னமாவது
பிடிக்கவில்லை!

யார்கெட்டால் என்னநான் வாழ்ந்தால்
போதுமென்ற சிந்தைகள்
பிடிக்கவில்லை!

பெயர்கெட்டால் என்னவிப்போ?
எப்படியும் வாழ்வோம்
என்பதும் பிடிக்கவில்லை!

பார்கெட்டால் என்னபதவிதான் பெரிது
என்றவர் போக்கும்
பிடிக்கவில்லை!

ஆர்கெட்டால் என்னஆம்பிளை நானெனும்
ஆடவரையும்
பிடிக்கவில்லை!

திறமைகள், கடும்முயற்சிகள்
கணக்கிலெடுக்காமற் போவது
பிடிக்கவில்லை!

புலமைகள் சிலபொழுதுகளில்
களவெடுக்கப் படுவதும்
பிடிக்கவில்லை!

தலைமைகள் தந்தவறுகளை
தம்கீழார் தலைகளிற் சுமத்துதல்
பிடிக்கவில்லை!

நிலைமைகளறிந்து தம்பெற்றோருடன்
ஒத்துநடவாத சிறார்களையும்
பிடிக்கவில்லை!

செய்யாத தவறுக்குத் தண்டனை
பெறும் கோழைகளைப்
பிடிக்கவில்லை!

செய்யாத தவறை
செய்ததாய் நிறுவும் சீற்றமும்
பிடிக்கவில்லை!

பெய்யாத மழைமுகிலாய்
சொல்லாத காதல்களும்
பிடிக்கவில்லை!

கொய்யாத மலராய்
கூரையைப் பார்க்கும் குமர்கள்மூச்சும்
பிடிக்கவில்லை!

சுற்றிவளைத்து சொன்னதையே
சொல்லும் சிலர்கதைகள்
பிடிக்கவில்லை!

மெச்சிவதைத்து காரியம் ஆற்றுவிக்கும்
கயமைகள்
பிடிக்கவில்லை!

தட்டிக்கழித்து கடமைகளை
தாமதமாக்குபவர்களைப்
பிடிக்கவில்லை!

நீட்டிநிமிர்ந்து நிதமும்நித்திரையில்
நேரம்போக்குபவர்களை
பிடிக்கவில்லை!

சொல்வதொன்று
செய்வதொன்று செய்பவர்களைப்
பிடிக்கவில்லை!

கொள்கையென்று இல்லாத
மனிதசகவாசமுந்தான்
பிடிக்கவில்லை!

கல்கவென்று தன்குழந்தைகளை
வழிநடத்தா பெற்றோரைப்
பிடிக்கவில்லை!

வெல்வதென்று
நோக்கமில்லாப் போட்டியாளர்களைப்
பிடிக்கவில்லை!

கட்டியவள் கண்கலங்க
சூதாட்டம் ஆடுமாண்வர்க்கம்
பிடிக்கவில்லை!

வெட்டியென
வீண்பொழுது போக்கும் எவரையுமே
பிடிக்கவில்லை!

பட்டியெனக் கிளர்ந்துபோய்
பச்சையாய்ப் பேசும்வாலிபர்களைப்
பிடிக்கவில்லை!

சிமிட்டிப்பேசி சமிக்ஞை கொடுத்துச்
சீரழிக்கும் சிங்காரிகளைப்
பிடிக்கவில்லை!

பெற்றவர்கள் முதுமையை
உணராத மகவுகள் தன்னைப்
பிடிக்கவில்லை!

கற்றவர்கள் மத்தியில் கனதியாய்ப்
பேசுமற்றவர் தரம்
பிடிக்கவில்லை!

கெட்டவர் சகவாசம் கூடாதெனும்
சொல்கேட்கா பிள்ளைகள்
பிடிக்கவில்லை!

பட்டவர் அனுபவங்கள் பாடங்கள்!
புத்தி தெளியாதவர்களைப்
பிடிக்கவில்லை!

நாமுந்தப்பு செய்யக்கூடும்
எனவெண்ணமறுக்கும் மாந்தரைப்
பிடிக்கவில்லை!

நாளுந்தப்புச் செய்து
மன்னிப்புக் கேட்கும் பாங்கும்
பிடிக்கவில்லை!

கோளுந்தப்புச் செய்யும்
தொடர்ந்த வினைத்திறனால்! நம்பாதவர்
பிடிக்கவில்லை!

நானுந்தப்புச் செய்து
நயம்பத் தோன்றியதோ? இக்கவிதை!
யாருக்குப் பிடிக்கவில்லை?

=========================================================